Tamil


மதிப்பீடு

பல்லாண்டு காலமாய்
உடைக்க முயல்கிறேன் சுத்தியால்
என் மனதினைச் சூழ்ந்த சுவற்றினை
ஓரு நாள் சுவர் வீழ்ந்திடக் காண்கிறேன்
அதன் உள்ளிருக்கும் மனிதனே
சுத்தியை ஏந்தி நின்றிருந்தான்
இக்காலமெல்லாம்…

—Ian Boyden
Translator: Remitha Satheesh